இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

🕔 January 14, 2018

– அஷ்ரப் ஏ சமத் –

பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு ராஜாங்க அமைச்சா் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்தார்.

கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் ரோசி சேனநாயக்கவை ஆதரித்து, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இந் நிகழ்வில் ரோசி சேனாநயாக்கவை ஆதரித்து முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பிரதம மந்திரி  ரணில் விக்ரமசிங்க, இரான் விக்கிரம, அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நோக்கிப் பேசிய சாகல ரத்நாயக்க; “நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். அமைச்சரவை அமைச்சராக வேண்டும். 2020 ல் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு தற்பொழுது சிறந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதன்போது, பிரதம மந்திரி பதவியி அமர்த்துவதற்கு, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பொத்தமானவர்” என்றார்.

ஆயினும், இந்த அழைப்புக்கு இம்தியாஸ் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.

Comments