வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

🕔 January 12, 2018

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக 243 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்