நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்

🕔 January 10, 2018

நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளிதுமளியில் ஈடுபட்டதோடு, ‘ரணில் திருடன்’ எனவும் கோசம் எழுப்பினர்.

இதன்போது தமது கைகளில் பதாதைகளை ஏந்தியிருந்த அவர்கள்; “திருடன் திருடன் ரணில் திருடன், திருடன் திருடன் வங்கித் திருடன்” என, நீண்ட நேரம் கோசம் எழுப்பினர்.

இதேவேளை, சிறு கைகலப்பும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அமைசச்சர் ஒருவர் தகாத வார்த்தைகளை இதன்போது பிரயோகித்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆளும்கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களே இவ்வாறு பிரச்சினைப்பட்டனர். இதன்போது இதனைத் தடுக்க பிரதமர் தலையிட்டார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்