பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு

🕔 January 9, 2018

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி – ஹாசினி அமேந்திராவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு, தங்கல்ல நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

தங்கல்ல பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்வதற்காக, தனது சட்டத்தரணியுடன் வருகை தந்தபோது, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

அரச வங்கியொன்றில் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி பணியாற்றியபோது, அங்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகையினை மோசடி செய்து விட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்