புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

🕔 January 9, 2018

முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கறுப்புக் கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி அல்லது முகத்தை மூடும் வையில் துணிகளை அணிந்து கொண்டு வருகின்வர்களும், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் அடையாளத்தினை நிரூபிப்பதில் யாராவது, தேர்தல் வாக்குச் சாவடியிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு தொந்தரவினை ஏற்படுத்துவாராயின், அவர்கள் திருப்பியனுப்பப்படுவார் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்