விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

🕔 January 8, 2018

– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி பெற்ற, 2016/2017 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் கலந்துகொண்டார்.

உயிரியல் பிரிவுக்கு 150 மாணவர்களும் பௌதீக பிரிவுக்கு 115 மாணவர்களும் அனுமதி பெற்றிருந்தனர்.

திணைக்களங்களின் துறைத் தலைவர்களான ஏ. நசீர் அஹ்மட், எம்.எப். நவாஸ், கலாநிதி கோமதிராஜ் ஆகியோரும்  சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எச்.எம்.எம். நளீர் உட்பட உதவிப்பதிவாளர், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலர் இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

 

Comments