அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது

🕔 January 8, 2018

திறைசேறி முறிகள் மற்றும் ஏனைய முதலீடுகளின் நிமித்தம் மத்திய வங்கியில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 1000 கோடி ரூபாவினை (10 பில்லியன்) மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

அதேவேளை, பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கீழ் பங்குப் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 200 கோடி ரூபாவினை (02 பில்லியன்) முடக்கி வைக்குமாறு, பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனத்தின் சுமார் 1200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் கட்டளையின் கீழ் முடக்கி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

பிணை முறியின் மூலம் அரசுக்குச் சொந்தமான 1145 கோடி ரூபாவினை (11.45 பில்லியன்) அலோசியஸ் மகேந்திரனக்குச் சொந்தமான பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் மோசடி செய்து பெற்றுக் கொண்டதாக, பிணை முறி தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணை்குழு அறிக்கை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்