சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்

அதேவேளை, தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறிச் செயற்படும் காரியாலயங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, மதஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக சமய நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்கள் வௌியிட்டப்பட்டால், வேட்பாளர்களுக்கு எதிராகவும், மத ஸ்தலத்தின் தலைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.