தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

🕔 January 4, 2018

ள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவனப் பணியாளர்களை, அவர்களின் ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவதாக, தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் உண்மைத் தண்மையினைப் பரீட்சித்துப் பார்க்குமாறும், ஊடக நிறுவனங்கள் தேர்தல் காலப் பகுதியில் வெளியிடும் செய்திகள், ஏதேனுமொரு கட்சியை அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்துவதாகவோ அல்லது பின்னடையச் செய்வதாகவோ இருக்குமா என்பதை கவனிக்குமாறும், ஊடக நிறுவனங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்