10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர்.
பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, 10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் – பொலிகண்டி பிரதேசத்தைச் சேர்ந்தத 29 வயதுடையவராவார்.
சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.