அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா

🕔 December 28, 2017

ரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவிசாளராகவுள்ள அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவில் 21 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

சிறுபான்மை அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரமன் மற்றும் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரும் அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Comments