தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு

🕔 December 24, 2017

ள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் சார்பாக அவருடைய கணவர் பகிர்ந்தளிக்கவிருந்த உர மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றிய சம்பவம், அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மனைவிக்காக இவ்வாறு உர மூட்டைகளை பகிர்ந்தளிக்கவிருந்தவர், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் என தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, அனுராதபுரம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் முறையிடப்பட்டுள்ளது.

வாக்குகளை பெறும் பொருட்டு, வேட்பாளர்கள் சார்பில் பொருட்கள் விநியோகிப்பது, தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்