பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை

🕔 December 21, 2017

ள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்துதல், அவர்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் மற்றும் அவர்களின் நற்பெயருக்கு சேறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவதாக, அனைத்து வேட்பாளர்களும் உறுதியளித்துள்ளனர். எனவே, அந்த உறுதிப்பாட்டை மீறுவோறுக்கு எதிராக அரசியலமைப்பின் 104ஆவது பிரிவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இலங்கையில் முதன் முதலாக கலப்பு முறையில் நடைபெறும் முதலாவது உள்ளுராட்சி சபைத் தேர்தல் இதுவாகும்.

ஒவ்வொரு வேட்பாளர் பட்டியலிலும் 25 வீதமான பெண்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென, இந்த தேர்தல் சட்டத்டதில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் 25 வீதமான பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் எனவும், புதிய உள்ளுராட்சி தேர்தல் சட்டம் வலியுறுத்துகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்