தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது

🕔 August 12, 2015

Gold - 0123ங்கம் கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் இருவரை, இந்தியாவின் கேரளா மாநில சுங்கப் பிரிவினர், நேற்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது.

மேற்படி இருவரும், கொழும்பிலிருந்து கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கிய போதே, கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொன்றும் 200 கிராம் எடைகொண்ட 04 தங்கக் கட்டிகளை, இவர்கள் தங்களின் கால்களில் கட்டியிருந்த பண்டேஜுக்குள் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய சுங்கப் பிரிவினருக்குக் கிடைத்த – ரகசிய தகவலொன்றின் பேரிலேயே, மேற்படி இருவரும் கைதாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து கேரளா வந்து, அதன் பின்னர் சென்னை பயணமாகி, அங்கு – தாம் கொண்டு வந்த தங்கத்தினை விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டிருந்ததாக, கைதான இருவரும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்