சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 November 29, 2017

மஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக – தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் கூறினார்.

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலில், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்த போதே, இதனைக் கூறினார்

தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பெருந்தொகையானோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்;

இராணுவத்தினரையோ அல்லது தேசிய பாதுகாப்பினையோ பலவீனப்படுத்துவதற்காக நாட்டினை நான் கையேற்கவில்லை. சர்வதேசத்தினை வெற்றிகொள்வதற்கு காணப்பட்ட சவாலினையே நான் முதலாவதாக நிறைவேற்றினேன்.

உலகின் பலம்மிக்க தேசங்களின் உதாசீனத்திற்கு ஆளாகியிருந்த நமது நாடு, மீண்டும் சர்வதேசத்தின் நன்மதிப்பினை பெற்றுக்கொள்ள கடந்த மூன்று வருட காலத்திற்குள் முடிந்துள்ளது.

சிறந்த வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை, சர்வதேச நீதிபதிகள் பற்றிய சர்ச்சைகளை நிறைவுசெய்துள்ளதுடன், அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிலர் தொடர்ந்தும் அது பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

இதன்போது தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய இணையத்தளத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மலிக் சமரவிக்ரம, தலதா அத்துகோரல ஆகியோரும் தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் மனிஷா குணசேகர உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்