சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

🕔 November 26, 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும் – ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்வரும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments