சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

🕔 November 26, 2017

சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணியினருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசாங்கத்திலுள்ள பதவிகள் எவற்றினையும் தாம் கோரப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அஹுங்கலயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

பிரதமர் பதவியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் – ஒன்றிணைந்த எதிரணியினருக்கு வழங்கப்படவுள்ளதாக ஒரு வதந்தி உலவுவதாகத் தெரிவித்த அவர், அதனை முற்றாக நிராகரித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிரணியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை திங்கட்கிழமை நடபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்