கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

🕔 August 10, 2015

Kalmunai library - 01

– அப்துல் அஸீஸ்​ –

ல்முனை நகரில் அமைந்துள்ள  ஏ.ஆர். எம். மன்சூர்  பொது நூலக பெயர் பலகை, இன்று திங்கட்கிழமை அதிகாலை, இனம்காணப்படாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, கழற்றி வீசப்பட்டுள்ளதாக  கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

பெயர் பலகை சேதமாக்கப்பட்டு,  நூலக வளாகத்தின் பின்புறமாகவுள்ள பற்றைப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக –  நூலக  தலைமை பொறுப்பதிகாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள வீதியொன்றுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல், நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களினால் இடித்து நொறுக்கப்பட்ட நிலையிலேயே, இன்று நூலகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உடைக்கப்பட்ட, வீதி நினைவுக்கல் அமைந்திருந்த இடத்திலிருந்து, சுமார்  50 மீட்டர் தூரத்தில்,  ஏ.ஆர். எம். மன்சூர்  பொது நூலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Kalmunai library - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்