93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

🕔 November 25, 2017

ள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சட்ட ரீதியாக தடைகளற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, தேர்தல்களை நடத்தும் பொருட்டு, இந்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன.

சில உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்களில் பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்து, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரி 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதற்கிணங்க, குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினைப் பிறப்பித்தது.

இந்த நிலையிலேயே, இவ்வாறு சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க, இம்மாதம் 27ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குப் பின்னர் வேட்பு மனுக்களை கோரவுள்ளதாக ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்