தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி

🕔 November 25, 2017

மிழீழத்தின் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ (பெடரல் எபா) எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, இன்று சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து மோட்டார் சைக்கிள் பேரணியொன்றினை சிலர் ஆரம்பித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலையிலான பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களே இந்த பேரணியில் ஈடுபட்டனர்.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக, மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி இடம்பெற்றது.

இந்த பேரணியில் ஈடுபட்டவர்கள், தமிழீழம் என புலிகளால் குறிப்பிடப்படும் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்டுக்களை அணிந்திருந்ததோடு, கறுப்புப் பட்டிகளை தமது தலையில் கட்டியுமிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையில் ஆரம்பமான இந்தப் பேரணியின் போது, புதிய அரசியலமைப்பின் பொருட்டு பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களும் பகிரப்பட்டன.

குறித்த பேரணி அவிசாவளை நோக்கி சென்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்