முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

🕔 November 21, 2017

காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் காலி – கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளின் சூடு தணிவதற்குள், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெற்றோல் குண்டு தீப்பற்றும் முன்னர் அணைக்கப்பட்டமை காரணமாக, சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்