ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம்

🕔 November 16, 2017

– முன்ஸிப் –

றாவூர் நகர சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். பிர்னாஸ் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பிர்னாஸ், அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

ஆசிரியராக தனது தொழிலை மிக இள வயதில் ஆரம்பித்த பிர்னாஸ் –  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவற்றிலும் உதவி செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமானி பட்டதாரியான இவர், இளவயதில் உயரிய பல பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்