இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள்

🕔 November 14, 2017

லங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

இவர்களில் சுமார் 1000 பேர் பெண்கள் என்றும், மொத்த தொகையினரில் இவர்கள் 5 வீதமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு ஹெரோயின் பாவனைக்கு அடிமையானோர் அதிகமானோர் பரிந்துரைகளின் அடிப்படையில், இதனைப் பாவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக நாட்டில் அதிகளவாகவும், பெருந்தொகையாகவும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் சந்தையின் முக்கியதளமாக, இலங்கை மாறி வரும் அபாயம் ஏற்பாட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு கவனத்துக்குரியதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்