வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு

🕔 November 7, 2017

ரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் தட்டுப்பாடு நிவர்த்தியாகும் வரையில், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாதென அமைச்சு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்