உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

🕔 November 3, 2017

ள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.கட்சி போட்டியிடும் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ராஜிதவின் அறிவிப்பினை அடுத்து; இரு கட்சிகள் அல்ல, ஆயிரம் கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு எப்படியான வியூகம் அமைத்து வந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ சார்பான கூட்டு எதிர்க்கட்சியினரை வெற்றிகொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்