நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

🕔 November 2, 2017

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை – உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது.

இரட்டை குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்