பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்

🕔 October 30, 2017

பால் மற்றும் தபால் சேவைகள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த துலிப் விஜேசேகர, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இவரை ஜனாதிபதி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் யாப்பு மீது உடன்பாடின்மை காரணமாகவே, எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தற்போது, நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்