மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம்

🕔 October 29, 2017

மின்னல் தாக்கியதில் மூன்று பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பலியாகியுள்ளனர். மெதமுலான – வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திறந்த வெளியில் நெல் உலர்த்திக் கொண்டிருந்த போதே, இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் 30 க்கும் 60 க்கும் இடைப்பட்ட  வயதுடையவர்களாவர்.

தற்போதைய நிலையில் நாட்டில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையினால், பொதுமக்கள் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்