தங்கம் கடத்திய இலங்கையர் இருவர், விசாகப்பட்டிணத்தில் கைது

🕔 October 27, 2017

லங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் நேற்று வியாழக்கிழமை, விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சரீப்டீன் முகம்மட் மஹ்றூப் எனும் ஆண் ஒருவரும், ஹாஜறா உம்மா செய்னுலாப்டீன் எனும் பெண் ஒருவருமே தங்கம் கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து யு.எல். 159 எனும் விமானத்திலிருந்து இவர்கள் விசாகப்பட்டிணத்துக்கு பயணித்துள்ளனர்.

முகம்மட் மஹ்றூப் எனும் மேற்படி நபரின் வயிற்றினுள் இரண்டு தங்கக் கட்டிகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து கிங் ஜோர்ஜ் வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு – வைத்திய மேற்பார்வையின் கீழ், அவரின் வயிற்றிலிருந்த தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவருடன் சென்ற ஹாஜறா உம்மா என்பவரிடமிருந்து 88 கிராம் எடையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை நாணப் பெறுமதியில் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகையின் சந்தைப் பெறுமதி 05 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்