நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம்

🕔 October 18, 2017

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க அம்பகமுவ பிரதேச சபையானது நோர்வூட்,  மஸ்கெலிய மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளாகப் பிரிக்கப்படவுள்ளன.

அதேபோல் கொட்டகல பிரதேச சபைக்கு மேலதிகமாக நுவரெலியா மற்றும் அக்கரைப்பத்தனை பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்