சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு

🕔 October 18, 2017

– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருது மக்களால் நீண்ட காலமாக கோரி வருகின்ற உள்ளுராட்சிசபையைப் பெறுவதற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தல்களில் சுயட்சையாக போட்டியிட தயங்கப் போவதில்லை என்று சுதந்திர சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார்.

சுதந்திர சமூக அமைப்பு நேற்று செவ்வாய்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

சுதந்திர சமூக அமைப்பின் தலைவர் என்.எம்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சாய்ந்தமருத்துக்கான உள்ளுராட்சிசபையை வழங்கும் விடயத்தில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பின்னிற்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது ஏ.ஆர்.எம். அஸீம்  மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருது ஏற்கனவே ஒருசபையாக நிருவாகிக்கப்பட்டது. இந்த ஊர் உள்ளுராட்சி சபை ஒன்றைக் கோருவதற்கு உரிய அனைத்து தகைமைகளையும் கொண்டுள்ளது. சாய்ந்தமருது மக்கள் அநீதியான முறையில் வஞ்சிக்கப்படுகின்றனர். இதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. இவை அனைத்தையும் எதிர்காலத்தில் உடைத்தெறிந்து சாய்ந்தமருது மக்களின் நியாயங்களை வெல்ல, ஊரில் உள்ள பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களையும் ஒன்றினைத்துக்கொண்டு போராடுவோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா போன்றோர், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக மக்கள் மத்தியில் உத்தரவாதங்களை வழங்கியபோதிலும் அவற்றினை நிவர்த்தி முன்வராதிருப்பது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. சாய்ந்தமருது மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் விடயத்தில் மிகுந்த விரக்தி ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொண்டு சத்தியாக்கிரக போராட்டங்களில் இறங்குவோம். சாய்ந்தமருது மக்களின் நியாயங்களை பெற்றுக்கொள்வதற்காக நியாயம்கோரி நீதிமன்றம் வரையும் செல்வதற்கும் தயாராகி வருகிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்