கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம்

🕔 October 16, 2017

– மப்றூக் –

லாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முதல் தர சித்தியுடன் பூர்த்தி செய்த ரமீஸ், சமூகவியலில் தனது முதுமானிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

அதன் பின்னர், புலமைப் பரிசில் பெற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சென்ற அவர், அங்கு தனது கலாநிதிப்பட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

சமூகவியல் தலைவராக நியமனம் பெறுவதற்கு முன்னர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரிப் பிரிவின் பொறுப்பாளராக ரமீஸ் பணியாற்றி வந்தார்.

சமூகவியல் தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ள கலாநிதி ரமீஸ் அபூபக்கர் சாய்ந்தமருதை சொந்த இடமாகக் கொண்டவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்