சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

🕔 October 13, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார்.

அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக் கட்சியின் மத்துகம அமைப்பாளர் குமார வெல்கம மற்றும் நாவலப்பிட்டிய அமைப்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளிலிருந்து சு.கட்சித் தலைவர் எனும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.

மேற்படி இருவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்