200க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதி

🕔 October 12, 2017

னியார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் சுயீனமுற்ற நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி – ஹரகம பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விசமடைந்தமை காரணமாகவே, இவர்கள் சுகயீனமுற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேற்படி ஊழியர்கள், இன்று தமது காலை உணவினை உட்கொண்டமையினை அடுத்து, திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் எவரும், ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று, வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்