வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து

🕔 October 7, 2017

டக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்று, முன்னாள் அமைச்சரும் புலிகளின் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது –  தந்தை செல்வாவின் கோரிக்கையாகும். அதனை யாரும் மாற்ற முடியாது. வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்பதே, எமது கட்சியின் கோரிக்கையாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்