தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி

🕔 October 6, 2017

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் வைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா பரோலில் (Parole – தற்காலிக விடுவிப்பு) வெளியில் வந்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு 05 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இன்று  வெள்ளிக்கிழமை அவர் சிறையிலிருந்து வௌியில் வந்துள்ளார்.

உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனைப் பார்க்கவேண்டும் என கூறி, 15 நாட்கள் பரோலில் செல்வதற்கு, சசிகலா அனுமதி கோரியிருந்தார்.

சென்னை மருத்துவமனை ஒன்றில் உள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் கூட்டங்கள் எவற்றிலும் பங்கேற்கக்கூடாது, ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடக்கூடாது என்பவை உள்ளிட்ட நிபந்தனைகள் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

சிறைக்கு வெளியே இன்று காலையிலிருந்து காத்திருந்த டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் ஆதரவு அ.தி.மு.க.வினர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.

சொத்துக் குவிப்புக் குற்றத்துக்காக, சசிகலாவுக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் சிறையில அடைக்கப்பட்டு சுமார் 08 மாதங்களுக்குப் பின்னர், வெளியில் வந்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றிக் கொண்ட போதும், அவர் சிறை சென்ற பின்னர், அந்தப் பதவியிலிருந்து அக்கற்றப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்