புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண

🕔 October 2, 2017

ற்றையாட்சி முறைமையை புதிய அரசியலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

மேலும், சமஷ்டி வழி முறைக்கும் புதிய அரசியலமைப்பு, வழி வகுக்காது எனவும் அவர் கூறினார்.

பௌத்த மதத்துக்குக்கு தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், புதிய அரசியலமைப்பில் பாதிப்புக்குள்ளாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் கூறினார்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறைமையை இன்னும் வலுப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், பிரிவினையை தடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பு அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்