வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

🕔 October 1, 2017

ட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண ஆளுநரின் கீழு் வரவுள்ளது.

ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபை கடந்த 26ஆம் திகதி கலைந்தது. நேற்று நள்ளிரவு கிழக்கு மாகாண சபையும் கலைந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு வடமத்திய சபை கலைகிறது.

மேற்படி மூன்று சபைகளின் தேர்தல்களையும் பிற்போடும் நோக்குடன்தான் ஏற்கனவே 20ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க முயற்சித்தது.

ஆயினும், நீதிமன்றின் வியாக்கியானம் காரணமாக 20ஆவது திருத்தத்தை அரசாங்கம் கிடப்பில் போட்டு விட்டு, மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்தை அமுலாக்கியதன் மூலம், இச்சபைகளின் தேர்தல்களை பிற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்