முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை
![](http://puthithu.com/wp-content/uploads/2017/09/Muslims-01122-1024x672.jpg)
தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம், நாளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில் தள்ளப்படுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை கருவறுக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த சதித்திட்டத்துக்கு துணை போக வேண்டாமென, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நல்லாட்சியின் இந்த துரோகச் செயலுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் வெளியேற வேண்டுமென சமூகத்தின் பெயரால் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் சமூகத்துக்குப் பெற்றுத்தந்த அரசியல் உரிமையை பேரினக் கட்சிகள் கபளீகரம் செய்வதற்கு, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கைகளை உயர்த்தி துணை போகக் கூடாது என்பதே, முஸ்லிம் மக்களின் வேண்டு கோளாகும்.