தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு

🕔 September 16, 2017

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் ‘ஞாபகார்த்த ஒன்று கூடல்’ எனும் நிகழ்வு  நடைபெறவுள்ளது.

தூய முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அஷ்ரப் பற்றிய நினைவுரைகளும், அவருக்காக பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத், தொழிலதிபர் நஸார் ஹாஜியார், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

‘வழிகெட்டுச் செல்லும் முஸ்லிம் அரசியலை, நல்வழிப்படுத்தும் போராட்டத்தின் அங்கமாக, மாமனிதர் அஷ்ரப் அவர்களை ஞாபகித்துப் பேசுவோம் வாரீர்’ எனும் கோசத்துடன், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் முக்கிய அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்