வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

🕔 September 15, 2017

ட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களைமீண்டும் வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டம், மீள்குடியேற்ற செயலணியினால் முன்னெடுக்கப்படுகிறது.

பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீள்குடியேறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான மேற்படி செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து – யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள், இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி, மீண்டும் தமது தாயகத்தில் மீள்குடியேறி வாழ்வதற்கு இந்த செயலணி உதவிகளை நல்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அல்லது www.taskforcepidp.lk  or www.resettlementmin.gov.lk என்ற இணைய முகவரி ஊடாகப் பெற்று, 2017.10.16 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் வசிக்கும் பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு;

திட்டப்பணிப்பாளர்,
நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீள் குடியேற்றுவதற்கான செயலணி
356B, 1ம் மாடி, காலி வீதி,
கொழும்பு – 03

என்ற முகவரியுடன் அல்லது

011-2574567 எனும் தொலைபேசி இலகத்கத்துடன்

உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்