அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது

🕔 September 15, 2017

– முன்ஸிப் அஹமட் –

.எம். அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூலுக்கு, சிறந்த முதல் கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், நூலாசிரியர் அஸ்கர் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸ்கர், வசந்தம் வானொலியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

பாடசாலைக் காலங்களிலிருந்தே கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட அஸ்கர், தேசிய பத்திரிகைகளிலும் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்