அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ

🕔 September 12, 2017

ந்த அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்று, பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை காரணமாக, அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்டுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து அருந்திகவை  இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி நீக்கியமையினை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, மேற்கண்ட விடயங்களை அருந்திக குறிப்பிட்டார்.

மேலும், “ஆரம்பத்திலிருந்தே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தேன். அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியிலேயே இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்