சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சப்ரகமுவ மாகாண சபையில் இன்று செவ்வாய்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 29 வாக்குகள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராக 08 வாக்குகளும் கிடைத்துள்ளன.
அந்த வகையில், 21 மேலதிக வாக்குகளால் 20ஆவது திருத்தம் சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது.
கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளிலும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நேற்று வாக்களிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.