ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க

🕔 September 8, 2017

டகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது குறித்துப் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

ஆயினும், ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோருவதற்கு, ரவி கருணாநாயக்கவுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என, இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஊடக அமைச்சு இதனைக் கோர முடியும் என்று, ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்