லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

🕔 September 8, 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு சீனி நோயினால் உபாதை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தமையினை அடுத்து, சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர்களை அனுமதித்துள்ளதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் துமிது பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; சிறைக் கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின், சிறைச்சாலை திணக்களத்தினுடைய ஆணையாளர் நாயகத்தின் அனுமதியினைப் பெற வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான ஆவணமொன்றினை தாம் தயாரித்து வருவதாக கூறினார்.

தற்போது சிறைச்சாலை வைத்தியரின் ஒப்புதலுடன், சிறைச்சாலை வைத்தியசாலையில் கைதிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்பான செய்தி: முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்