புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம்

🕔 September 6, 2017

புதிய அரசியல் யாப்பினூடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேசாமல் விட்டால், மக்களுக்குச் செய்யும் துரோகமாக அது அமைந்து விடுமென்றும் அவர் கூறினார்.

நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றிய போதே, முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தனக்கு எதிரான பிரசாரங்களையே ஊடகங்கள் முன்னெடுத்து வருவதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், பௌத்த பிக்குகளுக்கு வழங்கும் தானத்திலும் அரசாங்கம் கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய யாப்பினை நாட்டு மக்கள் கோரவில்லை என்று தெரிவித்த அவர், நடைமுறையிலுள்ள யாப்பு சிறந்தது என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்