அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம்

🕔 September 5, 2017

ந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இதனைக் கேட்டுள்ளார்.

இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்;

“எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் நாம் அதிக கவனம்செலுத்தியிருந்தோம். ஒரு அரசாங்கம் வழங்கும் தொழில் எண்ணிக்கை மத்திய வங்கியின் அறிக்கையில்குறிப்பிடப்படும். கடந்த கால அறிக்கைகளை அவதானித்த போது, 2015ம் ஆண்டை விட 2016ம் ஆண்டில் வழங்கப்பட்ட தொழில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் என்னவெல்லாமோ செய்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கப் போகிறோம் என்றது. இப்போது பார்த்தால் இலங்கையின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதும், அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதுமே நடைபெற்று வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தொழில் இல்லாமல் போகும் நிலையே ஏற்படும்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சந்திராணி பண்டார, இரண்டு வருடங்களில் 430,000 தொழில்களை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த எண்ணிக்கையை இவர் எங்கு பார்த்து கூறுகிறார் என்று விளங்கவில்லை. சிலவேளை பிரதமரின் பொக்ஸ்வோகன் கம்பனியில் இந்த தொழில் வழங்கப்பட்டிருக்கலாம்.

இப்படியான தொகை தொழில் வழங்கப்பட்டதாக இலங்கையின் மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதுதொடர்பில் நான் பகிரங்க தொலைக்காட்சி விவாதமொன்றிலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.எனது கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இவ் அரசாங்கத்தினுடைய காலத்தில் 430,000 தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் இலங்கை இளைஞர், யுவதிகள்ஓரளவு தன்னிறைவு அடைந்திருப்பார்கள். அப்படி சிறிதேனும் இடம்பெற்றமைக்கான சான்றுகளில்லை.

அமைச்சர் சஜித் பிரேமதாச உயரமானவர்களுக்கு காவலர் தொழிலும் குட்டையானவர்களுக்கு லேபர் தொழிலும் வழங்கியிருந்தார். இதனைத்தான் இவர்கள் தங்களது தொழில் புரட்சியாக கருதுகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறான தொழில்களைத்தான் இவ் அரசாங்கம் தொழில் புரட்சியாக கருதியிருந்தால், அரசாங்கத்தினர் வெட்கிக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் முறையான திட்டங்களை வகுத்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்க முன்வர வேண்டும். அதனை விடுத்து இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி இலங்கை மக்களை மீண்டும்முட்டாளாக்க முனைய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்