முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது

🕔 September 4, 2017

.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், லொத்தர் அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமான சரண குணவர்த்தன, கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதானார்.

நாடாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த போது, தனது சொத்துக் கணக்கினை வெளிப்படுத்தத் தவறியமைக்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், சரண குணவர்த்தனவுக்கு 02 ஆயிரம் ரூபாவிணை தண்டமாக விதித்து  தீர்ப்பளித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் சரணவுக்கு எதிராக மேலும் 09 குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments