ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

🕔 August 30, 2017

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை மாகாணசபை அமர்வில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதாக, உறுதி வழங்கியுள்ளார் எனவும் முதலமைச்சர் இசுரு தேவபிரிய கூறினார்.

இன்று நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட் பிரிவுகள் தொடர்பில் தனக்கு உடன்பாடுகள் இல்லை என்பதை, ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தான் தெரிவித்ததாகவும், தனது கருத்துடன் ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் இதன்போது கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடுள்ளது. ஆனால், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் மாகாணசபையினை கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவது தொடர்பில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்